வேலூர்

எல்ஐசி காப்பீட்டு விழிப்புணர்வுப் பேரணி

7th Sep 2019 02:50 AM

ADVERTISEMENT

எல்ஐசி காப்பீட்டு விழிப்புணர்வுப் பேரணி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
எல்ஐசி நிறுவனத்தின் 63-ஆவது ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட இந்த பேரணியை வடக்கு காவல் உதவி ஆய்வாளர் விநாயகம் தொடங்கி வைத்தார். எல்ஐசியின் வேலூர் கோட்ட முதுநிலை மேலாளர் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வணிக மேலாளர் ஜி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். 
இந்த பேரணி வேலூர் கோட்ட அலுவலகத்தில் இருந்து மண்டித் தெரு, மெயின் பஜார், காந்தி சாலை, சிஎம்சி வழியாக மீண்டும் எல்ஐசி கோட்ட அலுவலகத்தை அடைந்தது. 
பேரணியில் காப்பீடு குறித்த பாலிசி திட்டங்கள், நலத்திட்டங்கள் அடங்கிய விளக்கக் கையேடும் விநியோகிக்கப்பட்டன. பேரணியில், எல்ஐசி அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT