வேலூர்

உயர்அழுத்த மின்பாதை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

7th Sep 2019 11:42 PM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே நிலத்தின் வழியாக உயர் அழுத்த மின்பாதை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்ததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. 
ஜோலார்பேட்டை நகராட்சிக்குள்ட்பட்ட குடியானகுப்பம் பகுதியில் உள்ள துணை மின்நிலையத்துக்கு நாட்டறம்பள்ளி துணை மின்நிலையத்தில் இருந்து ரூ.4 கோடி மதீப்பீட்டில் தடையில்லா மின்சாரம் கிடைக்க மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்கு நாட்டறம்பள்ளி  அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி எல்லப்பள்ளியில் விவசாய நிலத்தின் வழியாக உயர்அழுத்த மின்பாதை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். 
இந்நிலையில் மின்வாரிய அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் பணியாளர்கள் 25}க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காலை மின்கம்பங்கள் அமைக்க பணியில் ஈடுபடுவதற்காக எல்லப்பள்ளிக்கு சென்றனர். 
இதனையறிந்த, கிராம மக்கள் மின்கம்பம் ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த நாட்டறம்பள்ளி உதவி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் போலீஸார் அங்கு சென்று கிராம மக்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தியும், பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. 
இதையடுத்து, அங்கு சென்ற நாட்டறம்பள்ளி மண்டல துணை தாசில்தார் திருமலை கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்தி உடன்பாடு ஏற்பட்ட பின் பணிகளைத் தொடர்ந்து நடத்துவது என்றும், அதுவரை தற்காலிகமாகப் பணிகளை நிறுத்தி வைக்கவும் துணை வட்டாட்சியர் திருமலை உறுதி கூறினார். 
இதனை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT