வேலூர்

ஆவின் நிறுவனம் பிரிப்பு: வேலூர், திருவண்ணாமலைக்கு தனித்தனி அதிகாரிகளை நியமிக்க முடிவு

7th Sep 2019 02:51 AM

ADVERTISEMENT

வேலூர் ஆவின் நிறுவனம் இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளதையொட்டி வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
வேலூர், திருவண்ணாமலை மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியமான ஆவின்  தலைமை அலுவலகம் வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் இரு மாவட்டங்களில் உள்ள 770 பால் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தினமும் சுமார் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 2 லட்சம் லிட்டர்  பால் சென்னைக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள பாலில் 72 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் விற்பனைக்காகவும், நெய், பால்கோவா, மோர், லஸ்ஸி, குல்ஃபி உள்ளிட்ட பால் உப  பொருள்களாகவும் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், வேலூர் ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தை வேலூர், திருவண்ணாமலை என இரண்டாக பிரிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினவிழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
 இதையடுத்து, ஆவின் நிர்வாகம், அதிகாரிகள் நியமனம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. 
இதுகுறித்து, ஆவின் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் ஆவின் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் வேலூர் மாவட்டத்தில் 272 சங்கங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 498 சங்கங்களும் உள்ளன. தற்போது ஆவின் நிறுவனம் வேலூர், திருவண்ணாமலை என இரண்டாகப் பிரிக்கப்படுவதால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சங்கங்கள் அந்தந்த மாவட்டத்துடன் இணைக்கப்படும். 
வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கங்கள் மூலம் தற்போது 1.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த கொள்முதலை அதிகரிக்கும் வகையில் ஊழியர்கள், பால் முகவர்களிடம் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். வேலூர், திருவண்ணாமலை என இரு மாவட்டங்களாக ஆவின் நிறுவனத்தை பிரிப்பதால் இரு மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களும் லாபத்தில் இயங்க வாய்ப்புள்ளது. தற்போது நிர்வாகம், கணக்குப் பிரிவிலுள்ள ஊழியர்களைப் பிரிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT