வேலூர்

அரிசி வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் வழிப்பறி

7th Sep 2019 11:43 PM

ADVERTISEMENT

வேலூர் அருகே வேலப்பாடி பகுதியில் அரிசி வியாபாரியைத் தாக்கி ரூ. 2 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். 
ஆரணி அருகே களம்பூரைச் சேர்ந்தவர் கோதண்டராமன் (49) அரிசி வியாபாரி. இவர் வேலூர், திருவண்ணாமலையில் உள்ள கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்து வருகிறார். 
கடந்த 4}ஆம் தேதி வேலூரில் அரிசி விநியோகம் செய்திருந்த கடைகளில் இருந்த பணத்தை வசூல் செய்து கொண்டு வேலப்பாடி சேர்வை முனுசாமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கோதண்டராமனை வழிமறித்து தாக்கி, அவரிடம் இருந்த ரூ. 2 லட்சத்தைப் பறித்துச் சென்றனராம். 
இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT