வேலூர்

விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்ட  விழிப்புணர்வு முகாம்

4th Sep 2019 07:40 AM

ADVERTISEMENT

ஆற்காடு வட்டார வேளாண்மைத்துறை சார்பில், மத்திய அரசின் திட்டமான பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்ட  விழிப்புணர்வு முகாம்   ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட   வேளாண்மைத்துறை துணை இயக்குநர்  சு.பேபிபர்வதம்  தலைமை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர்கள் வையாபுரி, இலக்கியா, தொழில்நுட்ப மேலாளர்கள்  செளந்தரி, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை அலுவலர்  லீலாவதி வரவேற்றார். 
இதில்  ஆற்காடு  ஒன்றியத்தைச் சேர்ந்த  குக்குண்டி, பாப்பேரி, களர், புன்னப்பாடி, சர்வந்தாங்கல் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 
இதுகுறித்து வேளாண்மைத்துறை  துணை இயக்குநர் சு.பேபி பர்வதம் கூறியது: 
பிரதமரின் விவசாயிகளுக்கான ஒய்வூதியத் திட்டத்தில்  18 முதல் 40 வயதுடைய சிறு, குறு விவசாயிகள்  பதிவு செய்து கொள்ளலாம். 60 வயதைக் கடந்த பிறகு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் சேரமுடியாது. 
எனவே, இந்த திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT