வேலூர்

ரூ. 35 லட்சம் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

4th Sep 2019 07:41 AM

ADVERTISEMENT

திருப்பதி அருகே செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரூ. 35 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
திருப்பதி அருகே ரேணிகுண்டாவில் உள்ள பாலபள்ளி வனப்பகுதியில் போலீஸார் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 30 பேர் செம்மரக் கட்டைகள் சுமந்து செல்வதைக் கண்டனர். போலீஸாரைக் கண்டவுடன் அவர்கள் செம்மரக் கட்டைகளை போட்டுவிட்டு, கற்களை வீசி தாக்குதல் நடத்தியபடி வனத்துக்குள் தப்பியோடி தலைமறைவாயினர். 
இதையடுத்து, போலீஸார் அங்கிருந்த 27 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 35 லட்சம் எனக் கூறப்படுகிறது. தப்பியோடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT