வேலூர்

மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி

4th Sep 2019 07:42 AM

ADVERTISEMENT

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் மின்சாரம் பாய்ந்து முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
சத்துவாச்சாரியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (60).  இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் சம்பவத்தன்று மின்சார விளக்கை போட்டபோது திடீரென மின்சாரம் பாய்ந்தது. காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.  சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT