வேலூர்

"மாணவர்கள் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்': மாவட்டக் கல்வி அலுவலர்

4th Sep 2019 07:41 AM

ADVERTISEMENT

மாணவர்கள் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் அரசுப் பூங்கா உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடவு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
தலைமை வகித்த திருப்பத்தூர் வட்டாட்சியர் இரா.அனந்தகிருஷ்ணன் பேசுகையில், முந்தைய காலங்களில் ஆறு, குளங்களில் குளித்தோம். குளம்,கிணறுகளில் இருக்கும் நீரை குடிநீராக பயன்படுத்தினோம். 
ஆனால், இன்று நிலத்தடி நீர் மாசடைந்ததாகக் கூறி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கிறோம். இதற்கு காரணம் நிலத்தடி நீர் மாசுபட்டதுதான். எனவே, மாணவர்கள் நிலத்தடி நீரை மாசுபடாமல் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும். நெகிழிப் பொருள்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர்(பொ) சி.சிவா பேசுகையில், மாணவர்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்து பாதுகாத்து வாருங்கள். 
அன்றைய காலத்தில் பாத்திரங்களில் குடிநீரை வைத்து குடிப்போம். ஆனால், இன்று பிளாஸ்டிக் கேன்களில் வைத்து குடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மரம் நடுவதன் மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.
 அதேபோல, மழைநீர் சேகரிப்பு கட்டுமான அமைப்பினை உங்களது வீடுகளில் அமைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சண்முகம் வரவேற்றார். நிகழ்ச்சியில்,மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் வா.தாமோதரன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT