வேலூர்

பெண்ணிடம் தங்க டாலர் பறிப்பு

4th Sep 2019 07:43 AM

ADVERTISEMENT

கே.வி. குப்பம் அருகே பாஜக மகளிரணி நிர்வாகியிடம் முகமூடி  அணிந்து வந்த மர்ம நபர்கள் தங்க டாலரை பறித்துச் சென்றனர்.  
கே.வி. குப்பத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில்குமாரின் மனைவி வசந்தி(35). பாஜக மாவட்ட மகளிர் அணித் தலைவி. இவர் வடுகந்தாங்கல் பஜாரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் கடையை மூடிக்கொண்டு இருந்தாராம். அப்போது மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். சங்கிலியை பறிக்க விடாமல் அவர்களிடம் வசந்தி போராடினாராம். 
அப்போது சங்கிலியில் இருந்த 4 பவுன் தாமரை டாலரை மட்டும் அவர்கள் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். 3 பவுன் தங்கச் சங்கிலி மட்டும் அங்கேயே விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. 
வழிப்பறி கொள்ளையர்களிடம் நடைபெற்ற போராட்டத்தால் காயமடைந்த வசந்தி வடுகந்தாங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் குறித்து கே.வி. குப்பம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT