வேலூர்

பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 07:41 AM

ADVERTISEMENT

பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 7 மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து ராணிப்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
வேலூர் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள்  பணிபுரிந்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஏழு மாத ஊதியம் வழங்காத மத்திய அரசை கண்டித்தும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்காததை கண்டித்தும் செவ்வாய்க்கிழமை ராணிப்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் இணைந்து   கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 
திருப்பத்தூரில்... 
திருப்பத்தூரில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலர் ஜி.ரவி தலைமை வகித்தார். என்எப்பிடி கிளைத் தலைவர்சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் கிளைத் தலைவர்  ஏ.ஆறுமுகபாண்டி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.
நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஏழு மாத ஊதியத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT