வேலூர்

தொழிலாளியிடம் வழிப்பறி  செய்தவர் கைது

4th Sep 2019 07:43 AM

ADVERTISEMENT

வேலூரில் தொழிலாளியை கத்தியால் குத்தி விட்டு, ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை வழிப்பறி செய்த நபரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
வேலூர் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தச்சு தொழிலாளி சங்கர் (60).  இவர் இரு தினங்களுக்கு முன்பு பணியை முடித்து விட்டு, சேண்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவ்வழியே வந்த ஒரு நபர், கத்தியைக்காட்டி மிரட்டி பணம் தருமாறு கேட்டார். பணம் தராததால் கத்தியால் குத்திய அந்த நபர், அவரிடமிருந்து ரொக்கப் பணம் ரூ. 5 ஆயிரத்தையும், கைகடிகாரத்தையும் பறித்துச் சென்றார்.  காயமடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக, வேலூர் வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
விசாரணையில், வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (36) வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தேடுதலில் ஈடுபட்ட போலீஸார் தோட்டப்பாளையத்தில் பதுங்கியிருந்த நாகராஜை கைது செய்தனர்.  அவரிடமிருந்து ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரம், கைகடிகாரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இவர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்றும், தலைமறைவு குற்றவாளி என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT