வேலூர்

தேசிய நெடுஞ்சாலை தடுப்பில்  கார் மோதி ஒருவர் பலி

4th Sep 2019 07:43 AM

ADVERTISEMENT

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் விஜய் (26). இவர் பெங்களூரில் கட்டட ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார்.   விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஊருக்கு வந்த அவர் காரில் நண்பர்களுடன் பெங்களூரு சென்று கொண்டிருந்தார். 
கார் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு மீது மோதியது. இதில் விஜய் உள்ளிட்ட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  
அங்கு விஜய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதுகுறித்து, ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT