வேலூர்

செப். 7-இல் வேலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சியில் கடவுச்சீட்டு முகாம்

4th Sep 2019 07:58 AM

ADVERTISEMENT

சென்னை கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மண்டல அலுவலகம் சார்பில் வேலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சியில் சிறப்பு கடவுச்சீட்டு முகாம் சனிக்கிழமை (செப். 7) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும், வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வோர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏதுவாக வேலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரியில் உள்ள அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையங்களில் சனிக்கிழமை (செப். 7) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பங்குபெற விண்ணப்பிப்போர் w‌w‌w.‌p​a‌s‌s‌p‌o‌r‌t‌i‌n‌d‌i​a.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து ஏ.ஆர்.என். எண்ணைப் பெற்று, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி  சந்திப்புக்கான நேரத்தை பெற்றுக் கொள்ளலாம். 
இந்த முகாமில் பங்குபெறும் விண்ணப்பதாரர்கள் பார்வை நேரம் மற்றும் ஏ.ஆர்.என். விவரங்களை அச்சிட்ட வடிவத்திலும், தேவையான அசல் ஆவணங்களையும், சுயச்சான்று அளிக்கப்பட்ட இரண்டு நகல்களையும் கொண்டு வரவேண்டும். இந்த முகாம் மூலம் சுமார் 170 பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT