வேலூர்

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

4th Sep 2019 07:39 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியில் அரசமர விநாயகர் சதுர்த்தி விழாக்குழு சார்பில் ஏழை பெண்கள், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 வாணியம்பாடி  ஆம்பூர்பேட்டை அரசமர விநாயகர் சதுர்த்தி விழாக்குழு அறக்கட்டளை  சார்பில் 22-ஆம் ஆண்டாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் விஜயகுமார், சரவணன், விஜயகுமார் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை தலைவர் மோகன் வரவேற்றார். 
 நகராட்சி ஆணையாளர் கோபு, மேலாளர் ரவி ஆகியோர் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர மிதிவண்டியும், 5 ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும், ஆயிரம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களையும் வழங்கினர். தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், ஐயப்பன், முருகன், சீனிவாசன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT