வேலூர்

எல்.ஐ.சி. 63-ஆம் ஆண்டு காப்பீடு வார விழா

4th Sep 2019 07:39 AM

ADVERTISEMENT

இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் (எல்.ஐ.சி. ஆப் இந்தியா) 63-ஆம் ஆண்டு காப்பீடு வார விழா வேலூர் கோட்ட எல்ஐசி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாரவிழாவை வேலூர் விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து எல்ஐசியின் சேவைகளைப் பாராட்டி பேசினார்.  வேலூர் முதுநிலை கோட்ட மேலாளர் என். ராமகிருஷ்ணன் பேசியது: 
வேலூர் கோட்டத்தில் கடந்த நிதியாண்டில் 1.70 லட்சம் பாலிஸிகளையும், ரூ. 310.82 கோடி பிரீமியத்தையும் வணிகமாக ஈட்டியது.  அதேபோல வேலூர் கோட்டத்தில் கடந்த நிதியாண்டில் 1.03 லட்சம் பாலிஸிதாரர்களுக்கு ரூ. 813.22 கோடி முதிர்வு மற்றும் இறப்பு உரிமத் தொகையை வழங்கியுள்ளது.
பொன்விழா அறக்கட்டளை மூலம் நலிந்த பிரிவின் கீழ் ஏழை மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 
வேலூர் கோட்டத்தில் 6 சமூக சேவை அமைப்புகளுக்கு ரூ. 85.13 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  
இன்சூரன்ஸ் வார விழாவையொட்டி, வரும் செப். 6-ஆம்தேதி வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வுப் பேரணி, மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற உள்ளன என்று அவர் கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT