வேலூர்

உலக நன்மைக்காக ஸ்ரீ சக்கர பூஜை

4th Sep 2019 02:27 AM

ADVERTISEMENT


கோபத்தை குறைத்து, மலர்ந்த மலர் போல மனம் இருக்க வேண்டும் என ஸ்ரீ சக்கர பூஜையில்  பரத்வாஜ் சுவாமிகள் அருளுரை வழங்கினார்.                                   
ஆற்காடு நகரில் உள்ள சக்தி மண்டலியினர்  இறைமன்ற  வளாகத்தில்  உலக நன்மைக்கான ஸ்ரீசக்கர பூஜை நடைபெற்றது. இதில்  சென்னை அம்பத்தூர் யோகமாயா புவனேஸ்வரி  பீடாதிபாதி  பரத்வாஜ் சுவாமிகள் கலந்து கொண்டு ராஜராஜேஸ்வரி எந்திர வடிவிலான வரைபடத்தில் சக்கரம் அமைத்து செவ்வரளி ,மல்லிகை மலர்களால் அர்ச்சனை நடத்தப்பட்டது. தேன் கலந்த பாலினால் தர்ப்பணம் செய்து, 43 முக்கோணங்களில் தேவதைகளை பூஜித்து ஆகம விதிப்படி புஷ்பாஞ்சலி நடத்தப்பட்டது.  
 உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், பயங்கரவாதம் உருவாகாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 308 முத்திரை
தெய்வ குறியீடுகளை பக்தர்களுக்கு வழங்கி  புஷ்பாஞ்சலி பூஜையை நடத்தினார். 
பின்னர்  பக்தர்களுக்கு அருளாசி  வழங்கி அவர் பேசியதாவது: மனிதன் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அது மனிதனுக்கு  தேவையற்றது. கோபத்தால் பலரை இழக்க நேரிடும்; சாபத்துக்கும், பாவத்துக்கும் ஆளாக நேரிடும். துரியோதனன் கோபத்தினால்தான் பாண்டவர்களது சாபத்தைப் பெற்று அழிந்து போனான். ஸ்ரீசக்கர பூஜையால்  ஐஸ்வர்யமும், பேரானந்தத்தையும் பெறலாம் . எப்போதும் மலர்ந்த மலர் போல் மனதை வைத்து கொள்ள வேண்டும்.   
ஜபம், தியானம், யோகம் இவற்றின் மூலம் அன்பை வளர்த்து உலகில் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும் என்றார் அவர்.  இந்த  பூஜையில் ஆற்காடு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT