வேலூர்

இருசக்கர வாகன விபத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவர் பலி

4th Sep 2019 07:42 AM

ADVERTISEMENT

வாலாஜாப்பேட்டை அருகே நடைபெற்ற விபத்தில் கொண்டகுப்பம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் உயிரிழந்தார். 
வாலாஜாப்பேட்டை  ஒன்றிய முன்னாள் உறுப்பினர் நரசிம்மன் மற்றும் கொண்ட குப்பம்  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பெரியசாமி  ஆகிய இருவரும் வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி நோக்கி இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில், படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் நரசிம்மன் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இந்த விபத்து குறித்து வாலாஜாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT