வேலூர்

ஆம்பூர் வட்ட விளையாட்டு போட்டிகள்

4th Sep 2019 07:39 AM

ADVERTISEMENT

பள்ளிக் கல்வித்துறை சார்பாக ஆம்பூர் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் இந்து கல்விச் சங்க தலைவர் எம்.ஆர். காந்திராஜ் தலைமை வகித்தார்.  தலைமை ஆசிரியர் (பொறுப்பு) டி. நாகராஜன் வரவேற்றார்.  ஆம்பூர் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.  
மாவட்டக் கல்வி அலுவலர் ஜி. லதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பி. சரஸ்வதி,  இந்து கல்விச் சங்க செயலர் சி. இராமமூர்த்தி, உதவிச் செயலர் ஏ.பி. மனோகர், உதவித் தலைவர் ஏ.ஆர். சுரேஷ்பாபு, பள்ளிக்குழு உறுப்பினர்கள் பி. ஹரிஹரன், கே. ஆனந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். உதவித் தலைமை ஆசிரியர் ஜி. சுரேஷ் நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT