வேலூர்

அரக்கோணத்தில் சிறப்பு குறை தீர் முகாம்களில் 4646 மனுக்கள்

4th Sep 2019 07:40 AM

ADVERTISEMENT

அரக்கோணம் வட்டத்தில் நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர் முகாம்களில் இதுவரை மொத்தம் 4646 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அரக்கோணம் வட்டத்தில் உள்ள 68 ஊராட்சிகளிலும், அரக்கோணம் நகராட்சியிலும் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர் முகாம்கள் நடைபெற்றது. பொதுமக்களிடையே பெறப்பட்ட மனுக்கள் குறித்து அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது:  முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்கள் மூலம் அரக்கோணம் நகராட்சியில் 695 மனுக்கள் உள்பட அரக்கோணம் வட்டத்தில் மொத்தம் 4646 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை கணிணியில் பதிவேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் புதன்கிழமை மாலை நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். இப்பணிகள் முடிவடைந்ததும் இம்மனுக்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 
தொடர்ந்து அந்தத் துறை அலுவலர்கள் மனுக்கள் பெறப்பட்ட நாளில் இருந்து 30 தினங்களுக்குள் தீர்வு கண்டு மனுதாரர்களுக்கு பதில் அளிக்க மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்வு காணப்பட்ட உடன் விழா நடத்தி மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார் வட்டாட்சியர் ஜெயக்குமார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT