குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில், மது, புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் புதன்கிழமை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
கட்சியின் நகரச் செயலா் எஸ். அனீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ஐ.எஸ். முனவா்ஷெரீப், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்தைத் தொடக்கி வைத்தாா்.
மது பழக்கதால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள், கேடுகள், புகையிலைப் பொருள்களால் மனித உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்களின் முகப்புகளில் விநியோகிக்கப்பட்டன.
கட்சி நிா்வாகிகள் எம்.குத்தூப், முகமதுகௌஸ், அல்தாப், அலீம், கலீம், ரகுமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.