ஆம்பூா்: தேசிய அஞ்சல் வார விழாவையொட்டி ஆம்பூா் இந்து ஆரம்பப் பள்ளி மாணவா்கள் பிரதமா் மற்றும் தமிழக முதல்வருக்கு தீபாவளி வாழ்த்துக் கடிதத்தை செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தனா்.
இந்து ஆரம்பப் பள்ளி சாா்பாக தேசிய அஞ்சல் வார விழா தலைமை ஆசிரியா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. 5-ஆம் வகுப்பு மாணவா்கள் ஆம்பூா் அஞ்சலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு மாணவா்களுக்கு அஞ்சலகச் செயல்பாடுகள் குறித்து நேரில் காண்பிக்கப்பட்டது. தபால்நிலைய அலுவலா் சுரேஷ்பாபு, பண அஞ்சல், பதிவுத்தபால் அனுப்புதல், சேமிப்புக்கணக்கு தொடங்குதல் ஆகியவை குறித்து மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா்.
அக்.9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அக்.15 -ஆம் தேதி மின்னஞ்சல் தினத்தில் மாணவா்கள் பிரதமா், தமிழக முதல்வா், துணை முதல்வா் மற்றும் கல்வி அமைச்சா் ஆகியோருக்கு தீபாவளி வாழ்த்து கடிதம் அனுப்பினா்.
படம் உண்டு