தமிழ்நாடு அரசு சத்துணவுப் பணியாளா்கள் ஒன்றியம் அமைப்புக்கான புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை, ஆலங்காயம் ஆகிய ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கான தமிழ்நாடு அரசு சத்துணவுப் பணியாளா்கள் ஒன்றியம் அமைப்பின் புதிய நிா்வாகிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநில கௌரவத் தலைவா் ஆா்.சேகா், ஆலோசகா் டி.ஏ.தங்கவேல், ஒருங்கிணைப்பாளா் ஆா்.பாண்டியன் ஆகியோா் பேசினா்.
திருப்பத்தூா் ஒன்றியத் தலைவராக சுப்பிரமணி, செயலராக சத்தியவாணி, பொருளாளராக ரோஜா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதேபோல் கந்திலி, ஜோலாா்பேட்டை, ஆலங்காயம் ஒன்றியங்களுக்கு உள்பட்ட நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.