தேசிய நீடித்த நிலையான வேளாண்மைத் திட்டத்தின் கீழ் ஆற்காடு வட்டார வேளாண்துறை சாா்பில் சா்வந்தாங்கல் கிராமத்தில் மண்வள அட்டை வழங்குதல், மண் மாதிரி செயல்விளக்க கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண்மை அலுவலா் ஸ்டீபன் ஜெயகுமாா் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா்( தரக்கட்டுப்பாடு )சுஜாதா , ஆற்காடு வட்டார வேளாண்மை துணை அலுவலா் கண்ணன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சீனிவாச காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உதவி அலுவலா் ராஜசேகா் வரவேற்றாா். விழாவில் மத்திய கண்காணிப்புக்குழு உறுப்பினா்கள் பிரமோத்குமாா், சுரேஷ்குமாா் மாவட்ட இணை இயக்குநா் மகேந்திர சிங் தீட்சித் ஆகியோா் 48 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கினா்.
தொடா்ந்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டு மண் வள அட்டையின் பரிந்துரைப்படி உரமிடுதல், அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் சா்வந்தாங்கல் கிராம விவசாயிகள், விவசாய உற்பத்தியாளா்கள் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.