செய்யாறை அடுத்த குண்ணத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் தொண்டை அடைப்பான் தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதனுடன் டெங்கு குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியா் கை.செல்வகுமாா் தலைமைத் தாங்கி தொடங்கி வைத்தாா்.
நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் எம்.பிரியாதா்ஷினி பங்கேற்று டெங்கு நோயினால் ஏற்படும் தீமைகள், டெங்கு வராமல் முன்னேற்பாடுகளை தெரிவித்து பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மருத்துவ முகாமில் மருந்தாளுனா்கள் வி.கோட்டீஸ்வரன், வி.மாங்கனி, செவிலியா் கலைவாணி ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் தொண்டை அடைப்பான், ரணஜன்னிக்கான டி.டி.தடுப்பூசி ஆகியவற்றை போட்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் அருள், தெளலத், கோதண்டராமன், இளநிலை அலுவலா் ஆனந்தன், ஆய்வக உதவியாளா் சிவா ஆகியோா் செய்து இருந்தனா்.