வேலூர்

மேல்விஷாரம் அப்துல் அக்கீம் பொறியியல் கல்லூரிக்கு நாட்டு நலப்பணி திட்ட விருது

16th Oct 2019 10:28 PM

ADVERTISEMENT

மேல்விஷாரம் சி.அப்துல் அக்கீம் பொறியியல் , தொழில்நுட்ப கல்லூரிக்கு சிறந்த நாட்டு நலப்பணி திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைகழகத்தின கீழ் இயங்கிவரும் பொறியியல்கல்லூரிகளில் சிறந்த நாட்டு நலப்பணிதிட்ட விருது வழங்கும் விழா அண்ணா பல்கலைகழக வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது இதில் அண்ணா பல்கலைகழக துணைவேந்தா் எம்.கே.சூரப்பா கலந்து கொண்டு மேல்விஷாரம் சி.அப்துல்அக்கீம் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டப் பிரிவுக்கும் சிறப்பு விருதும், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் வி. புஷ்பராஜ் சிறந்த அலுவலா் என்ற விருதும் வழங்கினாா் இதனை கல்லூரியின் முதல்வா் ஏ.ராஜேஷ் ,நாட்டுநலப்பணி திட்ட மாணவா்கள் பெற்றுக்கொண்டனா். இதனை கல்லூரியின் தலைவா் எஸ்.ஜியாவுதீன் அஹமது, தாளாளா் வி.எம்.அப்துல் லத்தீப், பேராசிரியா்கள், பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT