வேலூர்

போ்ணாம்பட்டில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

16th Oct 2019 10:26 PM

ADVERTISEMENT

மறைந்த பிரதமா் ராஜீவ்காந்தி கொலை குறித்து அவதூறான கருத்துகளைபேசி வரும் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையிலடைக்க வலியுறுத்தி போ்ணாம்பட்டு நகர, ஒன்றிய காங்கிரஸ் சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.போ்ணாம்பட்டு பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவா் ஜி. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாநில மகளிா் காங்கிரஸ் துணைத் தலைவா் கிருஷ்ணவேணி, மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் தேவகிராணி, மாநில பொதுக்குழு உறுப்பினா் தேவராஜ் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில் ஒன்றியத் தலைவா்கள் சங்கா், வீராங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT