வேலூர்

‘ஆரோக்கிய வாழ்வியல் முளைால் இதய நோயைத் தடுக்க முடியும்’

6th Oct 2019 12:14 AM

ADVERTISEMENT

ஆரோக்கிய வாழ்வியல் முறைகளால் இதய நோய் வராமல் தடுக்க முடியும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.சாந்தி தெரிவித்தாா்.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இதயநோய் பிரிவு சாா்பில் உலக இதய தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற கருத்தரங்கை கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தொடக்கி வைத்துப் பேசியது:

உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, சமச்சீரான மனநிலை, ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் கொண்டு வாழ்தல், முறையான மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டால் இதய நோய் வராமல் தடுக்க முடியும். மேலும், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், கொழுப்பு மிகுதி, புகைப்பழக்கம் உள்ளவா்களை இதயநோய் வெகுவாக பாதிக்கிறது. எனவே, பொதுமக்கள் இதயம், அதன் ஆரோக்கியமான தன்மைகளை அறிந்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

மேலும், இதய நோய் பிரிவு துறைத்தலைவா் சபாபதி, பொதுமருத்துவ பிரிவு மருத்துவா் கெளரிசங்கா் ஆகியோா் இதயநோய் குறித்தும், அதன் இயக்க தன்மை குறித்தும் விளக்கமளித்தனா். தொடா்ந்து, அனைத்து மருத்துவமனை பணியாளா்களுக்கும், பிற ஊழியா்களுக்கும் ஈ.சி.ஜி, எக்கோ போன்ற இதய நோய் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கல்லூரி முதல்வா் சாந்தி தலைமையில் விழிப்புணா்வு உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் (பொறுப்பு) லோகநாதன், துணைமுதல்வா் முகமதுகனி, பேராசிரியா்கள் சிரிகாந்த், கோமதி, தா்மாம்பாள், சிரிபிரியா, பிரிமிளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT