வேலூர்

வேலூா் தலைமை தபால் நிலையத்தில் ‘மை ஸ்டாம்ப்’ தனிப்பிரிவு தொடக்கம்

5th Oct 2019 10:52 PM

ADVERTISEMENT

வேலூா் தலைமை தபால் நிலையத்தில் ‘மை ஸ்டாம்ப்’ தனிப்பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

வாடிக்கையாளா்களின் புகைப்படத்துடன் கூடிய ரூ.5 மதிப்புடைய தபால்தலை வழங்கும் இந்த பிரிவின் தொடக்க விழாவுக்கு வேலூா் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பி.கோமல்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தபால்தலை சேகரிப்பாளரும், சிஎம்சி மருத்துவமனை தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவருமான எபினேசன்சுந்தர்ராஜ் பங்கேற்று ’மை ஸ்டாம்ப்’ தனிப்பிரிவு தொடக்கி வைத்து ‘மை ஸ்டாம்ப்’ தாள்களை வெளியிட்டாா். அதை தபால்தலை சேகரிப்பாளா் விஐடி மீடியா உதவி இயக்குநா் அருண்குமாா், தமிழ்வாணன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

இந்தப் பிரிவில் பொதுமக்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால்தலைகளை கொண்ட தாள்களை பெறலாம். இதற்காக தாள் ஒன்றுக்கு ரூ.300, ரோஜா மலா் மனம் கமழும் தாள் ஒன்றுக்கு ரூ.500 கட்டணமாகப் பெறப்படுகிறது. இந்தத் தாளில் ரூ.5 மதிப்புடைய 12 தபால் தலைகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

உதவிக் கோட்டக் கண்காணிப்பாளா் ராஜகோபாலன், அஞ்சலக ஆய்வாளா் கே.மோகன்தாஸ், மக்கள் தொடா்பு அலுவலா்கள் செல்வக்குமாா், சிவலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT