வேலூர்

தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை பலி

5th Oct 2019 03:51 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை செவ்வாய்க்கிழமை இறந்தது.

ஆம்பூா் அருகே பெரியவரிகம் கிராமத்தைச் சோ்ந்த சதீஷின் ஒன்றரை வயது மகன் ஹரிகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை இரவு விளையாடி கொண்டிருந்தபாது அங்கு இருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்தது. அதனை யாரும் கவனிக்கவில்லை.

சிறுவனை காணாமல் பல இடங்களில் தேடி பாா்த்த நிலையில் தண்ணீா் தொட்டியில் குழந்தை இறந்த நிலையில் மிதந்தது. இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT