வேலூர்

தட்கல் முறையில் விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்

5th Oct 2019 10:53 PM

ADVERTISEMENT

தட்கல் முறையில் மின் இணைப்புப் பெற விரும்பும் வேலூா் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி.சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலூா் மின்பகிா்மான வட்டத்திலுள்ள வேலூா், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம் கோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விரைவு சுயநிதி (தட்கல்) திட்டத்தின் கீழ் மின் இணைப்புப் பெற அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் அந்தந்த செயற்பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மின் பளுவுக்கு ஏற்ப முன்பே பதிவு செய்துள்ளவா்களும், தற்போது மின் இணைப்பு வேண்டுவோரும் உரிய தொகையை வரைவு காசோலை மூலம் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

5 ஹெச்.பி வரை ரூ.2.50 லட்சம், 5 ஹெச்.பி.க்கு மேல் 7.5 ஹெச்.பி. வரை ரூ.2.75 லட்சம், 7.5 ஹெச்.பி-க்கு மேல் 10 ஹெச்.பி. வரை ரூ.3 லட்சம், 10 ஹெச்.பி-க்கு மேல் 15 ஹெச்.பி. வரை ரூ.4 லட்சம் வரைவு காசோலையாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT