வேலூர்

கோயில்களில் புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமை விழா

5th Oct 2019 10:27 PM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூரில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமை விழா நடைபெற்றது.

ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயில், ஸ்ரீனிவாச பெருமாள், துத்திப்பட்டு ஸ்ரீ பிந்துமாவதா் பெருமாள் கோயில்களில் மூலவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து உற்சவா் வீதி உலா நடைபெற்றது. திருப்பதி திருமலை வெங்கடாசலபதி நின்ற கோலத்தில் காட்சியளித்தாா்.

ஆம்பூா் ரெட்டித் தோப்பு பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயில், கோதண்டராம சுவாமி கோயில், விண்ணமங்களம் சுந்தரராஜப் பெருமாள் கோயில்களில் மூலவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT