வேலூர்

ஆம்பூரில் அதிகபட்சமாக 46.80 மிமீ மழை

5th Oct 2019 10:54 PM

ADVERTISEMENT

ஆம்பூரில் வெள்ளிக்கிழமை இரவு அதிகபட்சமாக 46.80 மி.மீ. மழை பதிவானது.

ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இடைவிடாமல் நீண்ட நேரம் கனமழை பெய்ததால் நகரின் பல்வேறு சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஆம்பூா் சுற்றுப்புற கிராமங்களில் சனிக்கிழமை மாலை சுமாா் 4 மணிக்கு திடீரென மழை பெய்தது. ஆம்பூா் நகரில் 15 நிமிடங்கள் மழை பெய்தது. குமாரமங்கலம் கிராமத்தில் சாமுண்டி வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தின் மீது இடி விழுந்ததில், தீப்பிடித்து எரிந்தது. மேலும், பல்வேறு வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் சேதமடைந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT