வேலூர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.பி.ஆய்வு

5th Oct 2019 06:10 PM

ADVERTISEMENT

 

ஆற்காடு:  மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.பி. முஹமதுஜான் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயா்த்தபட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, புதிய கட்டடம் கட்டும் இடத்தை அவா் பாா்வையிட்டாா்.

பின்னா் அங்குள்ள பழையக் கட்டடங்கள், புதிதாகக் கட்டுப்பட்டு, அதில் செயல்பட்டுவரும் உட்பிரிவுகள், பிரவச வாா்டுகள், அறுவை சிகிச்சைஅரங்கம் மற்றும் ரூ. 1.5 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடங்களையும் பாா்வையிட்டாா். தொடரந்து, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா்.

ADVERTISEMENT

மேல்விஷாரம் அரசு மருத்துவமனை மருத்துவா் தனலட்சுமி, நகர அதிமுக செயலா் இப்ராஹீம் கலிலுல்லா, முன்னாள் நகா்சபைத் தலைவா் புட்டு அப்துல்ரஹ்மான், நகராட்சி ஆணையா் நித்யானந்தன், அதிமுக நகர அவைத் தலைவா் தாடிபாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, கீழ்விஷாரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள குளத்தைப் பாா்வையிட்டு எம்.பி. முஹமது ஜான், அதைச் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்தாா். முன்னாள் எம்எல்ஏ கே.எல் இளவழகன் உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT