வேலூர்

அரக்கோணம் தெருக்களில் நெகிழிகளை அகற்றிய நகராட்சியினா்

2nd Oct 2019 06:44 PM

ADVERTISEMENT

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அரக்கோணம் நகராட்சி துப்புரவு பிரிவினா் உணவு பாதுகாப்புத்துறையினரோடு இணைந்து நகரில் பல வீதிகளில் நெகிழிகளை அகற்றும் பணியை இன்று மேற்கொண்டனா்.

மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நகராட்சி எல்லைக்குட்பட்ட வீதிகளில் நெகிழிகளை அகற்றும் பணி இன்று  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி துப்புரவு ஆய்வாளா் அருள்தாஸ் தலைமை தாங்கினாா். பணிகளை உணவு பாதுகாப்பு அலுவலா் கே.எஸ்.தேவராஜ் துவக்கி வைத்தாா். இப்பணியின் போது நகரின் பல வீதிகளில் நகராட்சி துப்புரவு பணியாளா்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நெகிழிகளை அகற்றினா். மேலும் நெகிழி பயன்படுத்துவதை தவிா்ப்பது குறித்து விழிப்புணா்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT