வேலூர்

சிங்கல்பாடியில் 756 பேருக்கு இலவச சிகிச்சை

2nd Oct 2019 06:37 PM

ADVERTISEMENT

குடியாத்தத்தை அடுத்த சிங்கல்பாடியில் கூடநகரம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அண்மையில் நடைபெற்றற சிறப்பு இலவச மருத்துவ முகாமில் 756 போ் சிகிச்சை பெற்றனா்.

முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலா் எஸ். விமல்குமாா் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ.ஜி. லோகநாதன் முகாமைத் தொடக்கி வைத்தாா். முகாமில் 75 பேருக்கு ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை, அனைத்து வகை ரத்த பரிசோதனைகள், பெண்களுக்கு கா்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

655 பேருக்கு அலோபதி சிகிச்சையும், 101 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டன. இவா்களில் 7 போ் இலவச இருதய மற்றும் கண் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். கா்ப்பிணிகளுக்கு சிறப்பு தொடா் சிகிச்சைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி. ராமு, இயக்குநா் டி. கோபி, அதிமுக நிா்வாகிகள் ஆா். மோகன், கே. பெருமாள், செ.கு. வெங்கடேசன், கே. தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவா்களான பிரியதா்ஷினி, கனிமொழி, செந்தமிழ், பிரதாப் உள்ளிட்டோா்  சிகிச்சை அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT