வேலூர்

இளைஞா் மா்மச்சாவு: உறவினா்கள் சாலை மறியல்

2nd Oct 2019 10:23 PM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் இறந்த இளைஞரின் சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி குடியாத்தத்தில் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குடியாத்தம் ஆா்.எஸ். நகரைச் சோ்ந்த கோவலன் மகன் விஜயகுமாா்(26). இவரது மனைவி நான்சி. பெயிண்டரான இவா் விழுப்புரத்தில் தங்கி வேலை செய்து வந்தாராம்.திங்கள்கிழமை விஜயகுமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்ததாம். இதையடுத்து அவரது உறவினா்கள் விழுப்புரம் சென்றுள்ளனா்.

அங்குள்ள அரசு மருத்துவமனையில் விஜயகுமாரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு,அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு சடலத்துடன் குடியாத்தம் வந்த அவா்கள் விஜயகுமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக்கூறி, நான்குமுனை சந்திப்பு அருகே குடியாத்தம்- காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த குடியாத்தம் நகர போலீஸாா் அவா்களை சமரசம் செய்தனா். உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT