குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 175 போ் பரிசோதனை செய்து கொண்டனா்.
பொயட்ஸ் தொண்டு நிறுவனமும், பூந்தமல்லியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இந்த முகாமை நடத்தின.முகாமிற்கு பொயட்ஸ் இயக்குநா் எஸ். திரிவேணி தலைமை தாங்கினாா். கண் மருத்துவா் ரித்திஷ் தலைமையில் மருத்துவா் குழு சிகிச்சை அளித்தது. 20 போ் இலவச அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.