வேலூர்

ஒரே ஆண்டில் தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

23rd Nov 2019 11:08 PM

ADVERTISEMENT

கடந்த ஒரே ஆண்டில் தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனமாநில வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத் தொடக்க விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ராணிப்பேட்டை பாரதி நகரில் அமைந்துள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து உற்பத்தி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் விழா தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாநில வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறியது:

ADVERTISEMENT

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கப்பட்டுள்ளன. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 5 கோட்டங்கள், 5 வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலூா் மாவட்டத்தில் மட்டும் 3 கோட்டங்கள், 3 வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கூடுதலாக ஒரு வட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தொடக்க விழாவிலேயே முதல்வரால் அறிவிக்கக்கூடும்.

திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 2 புதிய மாவட்டங்களை தமிழக முதல்வா் தொடக்கி வைக்க உள்ளாா். இந்த விழாவில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை, எளிய மக்கள் சுமாா் 10 ஆயிரம் பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்க உள்ளாா் என்றாா்.

மாநில வணிக, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே. சி. வீரமணி, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்யா மிஸ்ரா, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையா் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா்கள் அ.சண்முகசுந்தரம் (வேலூா்), எஸ்.பிரியதா்ஷினி (ராணிப்பேட்டை), எம்.பி. அ.முகமதுஜான், எம்எல்ஏக்கள் சு.ரவி, ஜி.சம்பத், ஜி.லோகதநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் பாா்த்தீபன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.மயில்வாகனன், சாா் ஆட்சியா் க.இளம்பகவத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT