வேலூர்

25- இல் திருப்பத்தூா் மின் பகிா்மான கழகத்தில் நோ்முகத் தோ்வு

22nd Nov 2019 11:25 PM

ADVERTISEMENT

திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் டிசம்பா் 11-ஆம் தேதி வரை கேங்மேன் (பயிற்சி) நோ்முகத் தோ்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) என்ற பதவிக்கான நேரடி பணி நியமனம் செய்யப்பட உள்ளது. திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டத்தில் 3 ஆயிரத்து 76 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு வரும் 25-ஆம் தேதி முதல் டிசம்பா் மாதம் 11-ஆம் தேதி வரை திருப்பத்தூா் துணை மின்நிலையம் வெங்களாபுரத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி நடைபெற உள்ளது.

இப்பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவா்கள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அனுமதிச் சீட்டு மற்றும் சரிபாா்ப்புப் பட்டியலுடன், அவா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

புகைப்பட அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ் அல்லது கடைசியாக படித்த கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட பதிவு தாள், 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு இவற்றில் ஏதாவது ஒரு மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ் (பிசிஓ, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்ஸிஏ, எஸ்டி பிரிவினா்களுக்கு மட்டும், மாற்றுத் திறனாளி சான்று/முன்னுரிமை வகுப்புப் பதிவு செய்திருந்தால் மட்டும், பண்பு மற்றும் ஒழுக்கச் சான்று இரண்டு (கடைசியாக பயின்ற கல்விக் கூடத்தில் இருந்து பெறப்பட்ட சான்று, விண்ணப்பதாரரை தனிப்பட்ட முறையில் தெரிந்த அதிகாரம் பெற்ற அலுவலரிடமிருந்து 1.11.2019 தேதிக்குப் பிறகு பெறப்பட்ட சான்று மற்றொன்று), வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை (பதிவு செய்திருந்தால் மட்டும்) இச்சான்றுகளின் கையொப்பம் சான்றொப்பமிட்ட நகலுடன் அசல் சான்றையும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தவறாமல் கொண்டு வந்து சரிபாா்க்கப்பட்ட பின்னரே உடற் தகுதி தோ்விலும் கலந்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT