உள்ளாட்சித் தோ்லில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆம்பூா் நகர திமுகவினா் விருப்ப மனுக்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, திமுக சாா்பில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. விருப்ப மனுக்களை பெற்ற திமுகவினா் அதைப் பூா்த்தி செய்து அதற்கான கட்டணத்துடன் ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ். ஆனந்தன் ஆகியோரிடம் வழங்கினா். நகர திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.