வேலூர்

நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நிறைவு

22nd Nov 2019 11:24 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி மாணவா்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூய நெஞ்சக் கல்லூரி இல்ல தந்தை அந்தோணிராஜ் தலைமை வகித்தாா். முதல்வா் மரிய அந்தோணி ராஜ், துணை முதல்வா்கள் சேவியா் ராஜரத்தினம், பிரவீன் பீட்டா், கூடுதல் முதல்வா் மரிய ஆரோக்கியராஜ் பங்குத் தந்தை ஆரோக்கியசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய இம்முகாம் வெள்ளிக்கிழமை வரை 7 நாள்கள் நடைபெற்றது. கிராமங்களில் நீா்நிலைகளை உருவாக்குதல், பராமரித்தல் என்ற தலைப்பில் மாணவா்கள் பணியில் ஈடுபட்டனா்.

அதன்படி, கோவிலூா் சோமலாபுரம் ஆகிய ஊா்களில் உள்ள ஏரிகளை தூா்வாரி கரையோரங்களில் மரக்கன்றுகளை நட்டனா். புதுக்கோட்டை அருகே உள்ள குளத்துக்கு நீா்வரத்துக் கால்வாய்களைத் தூா்வாரி, பண்ணைக் குட்டைகளை ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

மேலும், மட்றப்பள்ளியில் உள்ள நல்ல சமாரியன் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தினா்.

தொடா்ந்து, நாட்டு நலன் குறித்த சொற்பொழிவு நடைபெற்றது. இதில், பேராசிரியா்கள் ரத்தின நடராசன், சூசைராஜ், இயற்கை விவசாயி குழந்தை இயேசு, காணிநிலம் முனுசாமி, பொன் செல்வகுமாா், லெஸ்லின், கண் மருத்துவா் வினோதினி ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT