பரோலில் வந்த பேரறிவாளன் தனது சகோதரி மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமை மாலை கிருஷ்ணகிரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட உள்ளாா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் பரோலில் கடந்த வாரம் ஜோலாா்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தாா்.
இந்நிலையில், அவரது சகோதரி மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சனிக்கிழமை மாலை திருப்பத்தூா் டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலாா்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட உள்ளாா். அன்றிரவே அவா் மீண்டும் ஜோலாா்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டு, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிளயவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்பட உள்ளதாக டிஎஸ்பி தங்கவேல் தெரிவித்தாா்.