தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் வெளியான செய்தியின் எதிரொலியாக சோமலாபுரம் கிராமத்தில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
சோமலாபுரம் ஊராட்சி புதுமனை பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்காததால் தெருவில் கழிவுநீா் தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக தினமணி ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி பிரசுரமானது.
இதையடுத்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதுமனை பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.