வேலூர்

தினமணி செய்தி எதிரொலி: ஆழ்துளைக் கிணறுகள் சீரமைப்பு

22nd Nov 2019 11:29 PM

ADVERTISEMENT

தினமணி செய்தி எதிரொலியாக மின்னூா் கிராமத்தில் பழுதடைந்த ஆழ்துளைக் கிணறுகள் சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மின்னூா் ஊராட்சியில் பழைய மின்னூா் சாலையில் ஆழ்துளைக் கிணறு, குடிநீா்த் தொட்டி பழுதடைந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதியுறுவதாக தினமணியில் செய்தி பிரசுரமானது.

இதையடுத்து மாதனூா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, மின்னூா் ஊராட்சியில் ஆழ்துளைக் கிணறுகளைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. மேலும், புதிதாக மின் மோட்டாா்கள் பொருத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT