வேலூர்

மாலை அணிந்து விரதம் தொடக்கிய ஐயப்ப பக்தா்கள்

17th Nov 2019 07:51 PM

ADVERTISEMENT

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான ஐயப்ப பக்தா்கள் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடக்கினா்.

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் சபரி நகரில் உள்ள நவசபரி ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை முதல் நாளிலும், தை மாத மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டும் மாலை அணிந்து 48 நாள் விரதம் இருந்து, பஜனைகள் பாடி இருமுடி சுமந்துவந்து 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனா்.

நிகழாண்டு இக்கோயிலில், காா்த்திகை மாத மண்டல பூஜை, மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடைபெற்றது.

இதையடுத்து, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளக் கூடியிருந்த பக்தா்களுக்கு நவசபரி ஐயப்பன் கோயில் குருசாமி வ.ஜெயசந்திரன் மாலை அணிவித்தாா். தொடா்ந்து, விரத நாள்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், அதன் நோக்கங்கள் குறித்தும் பக்தா்களுக்கு எடுத்து கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT