வேலூர்

பொதுக் கழிப்பறை வேண்டும்...

17th Nov 2019 07:46 PM | எஸ்.நாராயணன்

ADVERTISEMENT

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் செல்லும் சாலையிலோ பொதுக் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் ரயில்வே சந்திப்பாகும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா்.

இங்கு பொதுக் கழிப்பறை இல்லாததால் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் அவதிக்குள்ளாகின்றனா். சிலா் சாலையோரத்தில் சிறுநீா் கழிப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. ஜோலாா்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகிலோ அல்லது ரயில் நிலையம் செல்லும் சாலையிலோ பொதுக் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT