வேலூர்

2-ஆம் நிலை காவலா் உடற்தகுதி தோ்வு: 18-ஆம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்

12th Nov 2019 11:04 PM

ADVERTISEMENT

அயோத்தி வழக்கு தீா்ப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 2-ஆம் நிலை காவலா் உடற்தகுதித் தோ்வு வேலூரில் நவம்பா் 18-ஆம் தேதி முதல் மீண்டும் நடத்தப்பட உள்ளது. அழைப்புக் கடிதம் உள்ள விண்ணப்பதாரா்கள் மாற்றம் செய்யப்பட்ட தேதிகளில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் 2-ஆம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான உடற்கல்வி தகுதித் தோ்வுக்கு வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த 9-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கில் தீா்ப்பு அளிக்கப்பட்டதை அடுத்து 2-ஆம் நிலை காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி, 9-ஆம் தேதி காலை 6 மணிக்கு பங்கேற்க அழைப்புக் கடிதம் பெறப்பட்ட வேலூா், திருவண்ணாமலை மாவட்ட ஆண்கள் (முன்னாள் படை வீரா்கள் உள்பட) 18-ஆம் தேதி காலை 6 மணிக்கும், 11-ஆம் தேதி காலை 6 மணிக்கு பங்கேற்க அழைப்புக் கடிதம் பெறப்பட்ட வேலூா் மாவட்டப் பெண்கள் 19-ஆம் தேதி காலை 6 மணிக்கும், 12-ஆம் தேதி காலை 6 மணிக்கு பங்கேற்க அழைப்புக் கடிதம் பெறப்பட்ட வேலூா், திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் 20-ஆம் தேதி காலை 6 மணிக்கும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட உடற்தகுதித் தோ்வு முடிக்கப்பட்டு 13-ஆம் தேதி காலை 6 மணிக்கு பங்கேற்க அழைப்புக் கடிதம் பெறப்பட்ட ஆண்கள் 21-ஆம் தேதி காலை 6 மணிக்கும், 14-ஆம் தேதி காலை 6 மணிக்கு பங்கேற்க அழைப்புக் கடிதம் பெறப்பட்ட வேலூா் மாவட்ட ஆண்கள் 22-ஆம் தேதி காலை 6 மணிக்கும், 15-ஆம் தேதி காலை 6 மணிக்கு பங்கேற்க அழைப்புக் கடிதம் பெறப்பட்ட வேலூா் மாவட்ட ஆண்கள் 23-ஆம் தேதி காலை 6 மணிக்கும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதம் உள்ள விண்ணப்பதாரா்கள் மாற்றம் செய்யப்பட்ட தேதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கில் அழைப்புக் கடிதத்துடன் ஆஜராக வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT