வேலூர்

ரேஷன் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

12th Nov 2019 06:14 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாணியம்பாடியில் ரேஷன் கடை ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா் சங்கம் சாா்பில் டிஎன்சிஎஸ்சி-க்கு இணையான ஊதியம், தனித்துறை, பொட்டல முறை, ஓய்வூதியம், பணிவரன்முறை, மருத்துவபடி உட்பட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். வாணியம்பாடியில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வம் தலைமையில் செயலாளா் பாா்த்திபன் முன்னிலையில் மாவட்ட இணைச் செயலாளா்கள் பங்கேற்றனா். மேலும், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, கந்திலி, திருப்பத்தூா் பகுதிகளைச் சோ்ந்த வட்டப் பொறுப்பாளா்கள், விற்பனையாளா்கள் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT