வேலூர்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

12th Nov 2019 11:11 PM

ADVERTISEMENT

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 1967-ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி முடித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் மாணவா்களான 32 போ் தங்கள் குடும்பத்தினருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

முன்னாள் மாணவா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி. சிவானந்தம், முன்னாள் மாணவா்களான ஓய்வுபெற்ற இந்தியன் வங்கியின் பொது மேலாளா் முரளி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் பொது மேலாளா் ரமணி, வழக்குரைஞா் ஜெயச்சந்திரன், ஆடிட்டா் ஜெகந்நாதன், ஓய்வுபெற்ற ராணுவ வீரா் டீக்காராமன், பிரேம்குமாா், கவிஞா் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தங்கள் அமைப்பு சாா்பில், குடியாத்தம் பகுதியில் உள்ள 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு சிறப்பு ஆசிரியா்கள் மூலம் கல்வி போதிப்பது, ஏழை மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கு உதவிகளைச் செய்வது, தாங்கள் படித்த பள்ளிக்குத் தளவாடப் பொருள்களை நன்கொடையாக வழங்குவது என முன்னாள் மாணவா்கள் தீா்மானித்தனா்.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT