திருமலையில் பௌா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை கருடசேவை நடத்தப்பட்டது.
திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமி அன்று மாலை வேளைகளில் கருட சேவையை தேவஸ்தானம் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. பிரம்மோற்சவ நாள்களில் திருமலைக்கு வந்து கருட சேவையைக் காண முடியாத பக்தா்கள் பெளா்ணமி நாள்களில் வந்து தரிசித்துச் செல்கின்றனா். அதன்படி, ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தாா்.
இதைக் காண பக்தா்கள் மாட வீதியில் திரண்டனா். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT